கார்கில் வெற்றி நாள்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

கார்கில் வெற்றித் திருநாளின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 | 

கார்கில் வெற்றி நாள்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

கார்கில் வெற்றித்திருநாளின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப்பயணமாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். எனவே ட்விட்டர் வாயிலாக அவர் கார்கில் வெற்றி நாள் குறித்து  பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "கார்கில் போரில் வீரமரணம் அடைந்தோருக்கு இந்த நாடு தனது அஞ்சலியை செலுத்திக்கொள்கிறது. 'ஆப்பரேஷன் விஜய்' - இல் போது நாட்டிற்காக சேவை செய்த அனைவருக்கும் இந்நன்னாளில் அஞ்சலி செலுத்துவோம். இந்தியாவின் அமைதியை கெடுக்க நினைத்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. மேலும் நாட்டின் பாதுகாப்பை இந்திய ராணுவ வீரர்கள் உறுதி செய்துள்ளனர். 

கார்கில் போர் நடந்த சமயத்தில் சிறந்த அரசியல் தலைமை வழங்கிய அடல் பிகாரி வாஜ்பாயையும் இந்நேரத்தில் நினைவு கூற வேண்டும். நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவளித்து, ஊக்கமளித்து போரில் வெற்றி பெற வைத்துள்ளார். இந்த போரில் வெற்றி கண்டதன் மூலம் உலக நாடுகளின் மத்தியில் இந்திய ராணுவத்தின் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP