ட்விட்டரில் பெயரை மாற்றிக்கொண்ட பிரதமர் மோடி

நானும் காவலாளி தான் என்ற பிரச்சாரம் நேற்று பா.ஜ.க சார்பாக தொடங்கப்பட்ட நிலையில் இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பெயருக்கு முன் 'செளகிதர்'- காவலாளி என்ற வார்த்தையை சேர்த்துள்ளார்.
 | 

ட்விட்டரில் பெயரை மாற்றிக்கொண்ட பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன் 'செளகிதர்'- காவலாளி என்ற வார்த்தையை சேர்த்துள்ளார். 

பாரதிய ஜனதாவின் "நானும் காவலாளி தான்' என்ற பிரச்சார வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், காவலாளி நரேந்திர மோடி என தனது பெயரை மாற்றியுள்ளார். இதே போல அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் கணக்கில் பெயரை மாற்றி உள்ளனர். 

இதனையடுத்து பல பா.ஜ.கவினரும் தங்கள் சமூக வலைதளங்களில் பெயரை மாற்றி வருகின்றனர். மேலும் இதனை எதிர்கட்சிகள் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP