Logo

உலக தலைவர்கள் மத்தியில் ட்விட்டரிலும் உயர்ந்து நிற்கும் பிரதமர் மோடி

ட்விட்டரில் 50 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்று பிரதமர் நரேந்திர மோடி அதிகம் பின்தொடரும் இந்தியாராக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார்.
 | 

சமூக ஊடகங்கள் மூலம் மக்களைச் சென்றடைவதில் பெயர் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, தற்போது உலக தலைவர்கள் மத்தியில் ட்விட்டரிலும் உயர்ந்து நிற்கிறார். அரசியல், அறிவுரைகள், கருத்துக்கள், சொற்பொழிவு என பல விஷயங்களையும் அவர் சந்தித்த தலைவர்கள் குறித்தும் பிரதமர் அவரது ட்விட்டரில் அவ்வபோது பதிவிட்டு வருகிறார். இதனால் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் அவரை அதிகம் பின்தொடர்கின்றனர். இந்திய அரசியல் தலைவர்களில் முதலிடம் பிடித்து வந்த பிரதமர் மோடி, தற்போது 50 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்று ட்விட்டரில் 64 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நெருங்கி வந்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 108 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கூட 30 மில்லியனைத் தாண்டியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP