ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொள்ள கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிர்கிஸ்தான் புறப்பட்டுச் சென்றார்.
 | 

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு 2 நாட்களாக (ஜூன் 13 & 14)  நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிர்கிஸ்தான் புறப்பட்டுச் சென்றார். ஓமன், ஈரான் வழியாக அவர் இன்று பிற்பகல் கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரை சென்றடைகிறார். 

மாநாட்டின் இடையே அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிங்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP