அரசு முறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டார். இன்று மாலை பாரீஸ் சென்றடையும் பிரதமர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார்.
 | 

அரசு முறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டார்.

இந்தியா -பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டார். இன்று மாலை பாரீஸ் சென்றடையும் பிரதமர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார். 

தொடர்ந்து நாளை காலை பிரான்ஸ் பிரதமரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி பின்னர் பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மேலும், ஏர் இந்தியா விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

பின்னர் அங்கிருந்து அமீரகத்துக்கு  புறப்படும் பிரதமர் மோடி, வரும் 24 ஆம் தேதி பக்ரைன் செல்கிறார். அதை தொடர்ந்து மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர், பியாரிட்ஸ் நகரில் வரும் 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். 

newstm.in
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP