சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான உதவித்திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை டெல்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 | 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான உதவித்திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை டெல்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) கிரிராஜ் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான உதவித்திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு, மத்திய அரசும் நிதி நிறுவனங்களும் பல்வேறு வசதிகள் செய்திருப்பது பற்றியும், இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்வது பற்றியும் எடுத்துரைப்பதற்காக இந்த மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் பலரும் செல்வார்கள் என்று தெரிகிறது.

ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கின்ற, அதிக அளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் துறைகளில் ஒன்றான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேலும் ஊக்குவிப்பதற்கு இந்தத் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP