வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'Moving on.. Moving Forward: A Year in Office' என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.
 | 

வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பா.ஜ.க மூத்த தலைவர்  வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகமாக தொகுத்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை, பிரதமர் மோடி இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ஆனந்த் குமார் மற்றும் ராஜ்ய சபா எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

“Moving on…Moving forward: A year in office” என்ற தலைப்பிலான இந்த புத்தகம் 245 பக்கங்களை கொண்டுள்ளது. புதிய இந்தியா உள்ளிட்ட விவகாரங்களில், வெங்கையா நாயுடுவின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் முக்கிய விவகாரங்களில் வெங்கையாவின் பங்களிப்பு உள்ளிட்ட விபரங்கள், இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP