புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மாேடி

ஒடிசாவில், பனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிரதமர் நரேந்தரி மாேடி, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
 | 

புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மாேடி

ஒடிசாவில், பனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிரதமர் நரேந்தரி மாேடி, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். 

வங்கக் கடலில் உருவான பனி புயல், கடந்த 3ம் தேதி, ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பல இடங்களில் கன மழை பெய்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தொகையா, மத்திய அரசின் சார்பில், 4 மாநிலங்களுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், உபி, சத்தீஸ்கர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், ஒடிசாவுக்கு நிவாரண நிதிகளை தாராளமாக வழங்கியுள்ளன. 

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட, பிரதமர் நரேந்திர மாேடி இன்று, ஒடிசா சென்றடைந்தார். புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் மாேடி ஆய்வு செய்தார். அவருடன், முதல்வர் நவீன் பட்நாயக், கவர்னர் கணேஷி லால் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோ ர் உடன் இருந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP