உழவன் செயலியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் சேர்ப்பு 

உழவன் செயலியில் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்’ தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயலியில், பயனாளி முன்பதிவு சேவையில் ‘பி எம் கிசான்’ திட்டத்தை தேர்வு செய்து, விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று வேளாண் துறை தகவல் தெரிவித்துள்ளது.
 | 

மேலும், ’ஆதார் அட்டையில் உள்ளவாறு விவசாயிகள் தங்கள் பெயரை மாற்றி கொள்ளலாம். ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் அல்லது கைபேசி எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். உழவன் செயலியை ஆண்டிராய்டு கைபேசியில் கூகுள் பிளே ஸ்டோர், ஐபோனில் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றும் வேளாண் துறை கூறியுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP