கண்கலங்கிய சிவனை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர்!

கண்கலங்கி நின்ற இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித் தழுவி பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.
 | 

கண்கலங்கிய சிவனை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர்!

கண்கலங்கி நின்ற இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித் தழுவி பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார். 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மிக அருகில் சென்ற நிலையில் தகவல் தொடர்பு துண்டித்தது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  பிரதமர் மோடி பெங்களூர் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் அவர்கள் உழைப்பையும், முயற்சியையும் பாராட்டி உரையாற்றினார். 

தொடர்ந்து ஒவ்வொரு விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி கைகொடுத்து ஊக்கப்படுத்தினார். பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் மனம் உடைந்து கண்கலங்கியபடி பிரதமர் மோடியை வழியனுப்பிய போது, பிரதமர் மோடி அவரை கட்டுத் தழுவி, தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார். அந்த கணம் இஸ்ரோ தலைவருக்கு  ஆறுதல் கூறிய பிரதமர் மோடியும் கண்கலங்கினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP