நாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி

ரஃபேல் விவகாரத்தில் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணம், திருடப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய நிலையில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாட்டின் பாதுகாப்பை விட பத்திரிக்கை சுதந்திரம் முக்கியமல்ல, என தெரிவித்துள்ளார்.
 | 

ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், இந்து செய்தி நிறுவனம் வெளியிட்ட அரசு ஆவணம், திருடப்பட்டவை என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே அந்த ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வாதிடப்பட்டது. இந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்.ராம், ஆவணங்கள் திருடப்பட்டவை இல்லை என்றும், அதை வெளியிட்டவரின் அடையாளத்தை தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேட்கப்பட்டபோது, அவர் அந்த ஆவணம் குறித்து முடிவெடுப்பது நீதிமன்றத்திற்கான விஷயம், என்று கூறினார். "நீதிமன்றத்தில் நடப்பவை பற்றி நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கான விஷயங்கள் கசியவிடப்பட்டது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் உண்டு என்பதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அரசியல் சாசனத்தை எழுதியவர்கள் கூட, பத்திரிக்கை சுதந்திரத்தை விட, தேசிய பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்துள்ளனர். கடந்த 22 வருடங்களாக அது எதிர்க்கப்பட்டதில்லை" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP