சுஷ்மா உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.
 | 

சுஷ்மா உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், நேற்றிரவு மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். 

சுஷ்மா உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

இதேபோல், துணை குடியரசு தலைவர் வெங்கயா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP