எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி

வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார்.
 | 

எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் நரேந்திர மோடி

வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். 

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைக்கிறார். அந்தவகையில், வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். 

அதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் எம்பியாகவும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ எம்பியாகவும், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் எம்பியாகவும்  பதவியேற்றுக் கொண்டனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP