தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய பிரதமர் மோடியின் மூன்று கோரிக்கைகள்!

தண்ணீர் பற்றாக்குறையை விரைவில் சரி செய்யும் பொருட்டே ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 | 

தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய பிரதமர் மோடியின் மூன்று கோரிக்கைகள்!

தண்ணீர் பற்றாக்குறையை விரைவில் சரி செய்யும் பொருட்டே ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், "தண்ணீர் பற்றாக்குறையை விரைவில் சரி செய்யும் பொருட்டு ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. நீரின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, அனைவரும் நீரை சேமிக்க வேண்டும்.  

நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை நான் கவனித்து வருகிறேன். பழங்கால நடைமுறைகளை பின்பற்றுவது தான் ஒரே வழி. 

தண்ணீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். 100ஆண்டு காலமாக நீரை சேமிக்க நாம் கடைபிடித்து வந்த பழைய முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும். 

8% மழைநீரை கொண்டே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

தண்ணீரை சேமிப்பதற்கு நான் உங்களிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறேன். 

குடிநீரை சேமிப்பதற்கான வழிமுறைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.  'ஸ்வச் பாரத்' இயக்கத்தை போன்று நீர் மேலாண்மையின் அவசியம் குறித்தும் அனைத்து தரப்பினரையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

தண்ணீரை சேமிப்பதற்கான பழங்கால முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். தண்ணீரை சேமிப்பதற்கான பழங்கால முறைகளை #Janshakthi4jalshakthi என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்-இல் புதிய புதிய நீர்சேகரிப்பு முறைகளை மக்கள் தெரிவிக்கலாம். 

மேலும், தண்ணீரை சேமிப்பதற்கான வழிமுறைகளில் இதற்கு முன்னதாக பங்கெடுத்தவர்கள் தங்களது அனுபவங்களை கூற முன்வர வேண்டும். 

தண்ணீர் தான் உயிர். நீர் வளத்தை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

தாண்ணீர் பிரச்சனையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சகத்திடம் கேட்டுள்ளேன். இது தொடர்பாக பஞ்சாயத்து வாரியாக பல்வேறு பிரமுகர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்" என்று தண்ணீர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP