பிரதமர் மோடியின் பிறந்தநாள்: சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி பாஜக சார்பில் நாடு முழுவதிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
 | 

பிரதமர் மோடியின் பிறந்தநாள்: சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி பாஜக சார்பில் நாடு முழுவதிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. 

இதற்காக ஒருவாரம் சேவை வாரமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சேவை பிரச்சாரமாக கொண்டாடப்படும் என்று பாஜகவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், கட்சித் தொண்டர்கள் சார்பில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மோடியின் பிறந்த நாளையொட்டி, சுகாதார முகாம்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குதல், கண் பரிசோதனை முகாம்கள் உள்ளிட்டவை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP