இன்று திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி

திருப்பூரில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். சென்னையில் உள்ள புதிய மெட்ரோ ரயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
 | 

இன்று திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருப்பூர் வரவுள்ளார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் செல்லும் அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குறிப்பாக, சென்னையில் உள்ள டி.எம்.எஸ். பகுதியில் இருந்து வண்ணாரப்பேட்டை வரைக்குமான மெட்ரோ ரயில் சேவையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். திருப்பூரில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கும், திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட முனையம் அமைப்பதற்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர், பெருமாநல்லூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மோடி உரையாற்றவுள்ளார். அதேபோன்று, வரும் 19ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவரது பயணம், கட்சிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP