பஹ்ரைன் வாழ் இந்திய மக்கள் மத்தியில் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

பஹ்ரைனில் உள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்தார்.
 | 

பஹ்ரைன் வாழ் இந்திய மக்கள் மத்தியில் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

பஹ்ரைனில் உள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்து பேசினார். 

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் சென்ற மற்றும் அபுதாபிக்குச் சென்ற அவர் இன்று பக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளார். 

அங்கு பஹ்ரைன் இளவரசர் கலீபா பின் சல்மான் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு வர்த்தகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் பஹ்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

பஹ்ரைன் இளவரசரின் விருந்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தற்போது அங்குள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் அவர் உரையாற்றி வருகிறார். 

அவ்வாறு பேசும்போது, இன்று மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை நினைவு கூர்ந்தார். 'எனது நண்பர் இன்று மறைந்துவிட்டார், ஆனால், நான் இவ்வளவு தூரத்தில் இங்கே இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, எங்களது முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா அவர்களை இழந்தோம். இதனை என்னால் கற்பனை செய்து கூட  பார்க்க முடியவில்லை" என்று வருத்தத்துடன் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP