கன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல கன்னட நடிகர் மற்றும் அரசியல்வாதி அம்பரீஷ்-க்கு நெஞ்சுவலி காரணமாக நேற்று அவர் மரணமடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
 | 

கன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல கன்னட நடிகர் மற்றும் அரசியல்வாதி அம்பரீஷ்-க்கு  நெஞ்சுவலி காரணமாக நேற்று அவர் மரணமடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

நடிகர் அம்பரீஷ் உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 66. ஆனால், கடந்த சில நாட்களாக அம்பரீஷின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து, கவலைக்கிடமான நிலையில் இருந்தது  மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும். உடல்நலக்குறைவால் நடிகர் அம்பரீஷ் நேற்று இரவு மரணம் அடைந்தார். 

இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

இவரது மறைவுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அம்பரீஷ் இறப்புக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "கர்நாடக மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தவர். மேலும் அவரை நினைத்தால் அவரது நடிப்பும் கண்முன் வந்து நிற்கிறது. அவரது கூடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என தெரிவித்த்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP