அரபு நாட்டு இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று அபுதாபிக்குச் சென்ற நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் சயாத்' விருது அவருக்கு வழங்கப்பட்டது.
 | 

அரபு நாட்டு இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 22ம் தேதி பிரான்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். அதையடுத்து, இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்குச் சென்றார். 

அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் -னை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்டு நட்புறவு, வர்த்தகம், உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து,  ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் சயாத்' விருதும் பிரதமர் மோடிக்கு இன்று வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, பக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு இளவரசர் கலிபா அல் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதையடுத்து, மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பியாரிட்ஸ் நகரில் வரும் 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி -7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் டெல்லி திரும்புகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP