இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
 | 

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், இது தொடர்பான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதன் காரணமாக, கடந்த சில தினங்களாக காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு அவர் உரையாற்ற இருப்பதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஏன் திரும்பப்பெறப்பட்டது? என்பது குறித்து பிரதமர் மக்களுக்கு விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP