சிறு குடும்பங்களுடன் வாழ்வோர் தேசப்பற்று கொண்டவர்கள்: பிரதமர்

சிறு குடும்பங்களுடன் வாழ்வோர் உண்மையாகவே தேசப்பற்று கொண்டவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 | 

சிறு குடும்பங்களுடன் வாழ்வோர் தேசப்பற்று கொண்டவர்கள்: பிரதமர்

சிறு குடும்பங்களுடன் வாழ்வோர் உண்மையாகவே தேசப்பற்று கொண்டவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தொடர்ந்து, மக்கள் வளமாக வாழ அரசு அனைத்து கதவுகளை திறந்து வைத்துள்ளது என்றும், மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், ரூ.100 லட்சம் கோடி செலவில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். 

 நீரின்றி அமையாது உலகு என தமிழில் திருக்குறளை சுட்டிக்காட்டி நீரின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், வீட்டுக்கு வீடு குழாய் மூலம் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைவருக்கும் குடிநீர் அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார். 

இந்தியாவில் மக்கள் தொகை பெருகிவருவதை குறிப்பிட்ட அவர், குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்றி சிறு குடும்பங்களுடன் வாழ்வோர் உண்மையாகவே தேசப்பற்று கொண்டவர்கள் என்றார். தேவையற்ற சட்டங்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கடந்த 5 ஆண்டுகளில் 1,450 சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP