எல்லைப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள், வெறும் குடிமக்கள் மட்டுமல்ல, இந்த தேசத்தின் சொத்துக்கள் : ராஜ்நாத் புகழாரம்!!

11வது மைத்ரி திவாஸில் கலந்து கொள்வதற்காகவும், இந்தியா-சீனா எல்லை பகுதியை பார்வையிடுவதற்காகவும், நேற்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேசம் சென்றடைந்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 | 

2019ஆம் ஆண்டிற்கான மைத்ரி திவாஸ் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேசத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காகவும், அங்கு அமைந்திருக்கும் இந்தியா-சீனா எல்லையான தவாங் பகுதியில் சீனா ராணுவத்தினர் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டு வந்ததை தொடர்ந்து அந்த பகுதியை பார்வையிடுவதற்காகவும், நேற்று அருணாச்சலபிரதேசம் சென்றடைந்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

நேற்று நடைபெற்ற 11வது மைத்ரி திவாஸில், இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, வரவேற்பு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் கண்டுகளித்த ராஜ்நாத் சிங், தனது உரையாடலின் போது, எல்லை பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் வெறும் குடிமக்கள் மட்டுமல்ல என்றும், அவர்கள் இந்தியாவின் சொத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் போருக்கு முன்னர், இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டம் தெரிவதாக லடாக் மக்கள் தான் முதலில் தகவல் அளித்ததாகவும் அவர்கள் இல்லை எனில் இந்தியா இல்லை என்றும் உறுக்கமாக கூறியுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக அருணாச்சலபிரதேசம் சென்றடைந்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மைத்ரி தினத்தை தொடர்ந்து, கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நதி பாலமான சிசேரி பாலத்தையும், தேசிய நெடுஞ்சாலை 52யும் திறந்து வைப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP