மருத்துவமனையில் வழங்கப்பட்ட சூப்பில் ரத்தகறை படிந்த பஞ்சு- நோயாளி அதிர்ச்சி

மஹாராஷ்டிர மாநிலத்தில் நோயாளிக்கு வழங்கப்பட்ட சூப்பில் ரத்த கறையுடைய பஞ்சு இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 | 

மருத்துவமனையில் வழங்கப்பட்ட சூப்பில் ரத்தகறை படிந்த பஞ்சு- நோயாளி அதிர்ச்சி

மஹாராஷ்டிர மாநிலத்தில் நோயாளிக்கு வழங்கப்பட்ட சூப்பில் ரத்த கறையுடைய பஞ்சு இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவை சேந்தவர் மகேஷ் சத்புட். கர்ப்பிணியான இவரது மனைவியை கடந்த 29ஆம் தேதி அங்குள்ள ஜெஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதித்தார். அன்றைய தினமே மகேஷின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மருத்துவமனையில் தாயும், குழந்தையும் தங்கி  இருந்தனர்.

மகேஷின் மனைவிக்கு வெஜ் சூப் வாங்கித்தருமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து மகேஷ் மருத்துவமனை கேண்டீணில் மனைவிக்கு வெஜ் சூப் வாங்கிக்கொடுத்துள்ளார் .

இதனை மகேஷின் மனைவி குடித்தபோது அதில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடப்பதை வீடியோவாக எடுத்த மகேஷ் அதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் காண்பித்து முறையிட்டார்.

அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே சில ஊழியர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.

இருப்பினும் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து நோயாளியின் உறவினர்களிடம் விளக்கமளித்துள்ளதாக கூறியுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP