குடும்பத்தை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போ

குடும்பத்தை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இந்தியர்கள் 45 பேரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

குடும்பத்தை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கம்!

குடும்பத்தை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இந்தியர்கள் 45 பேரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு, நோடல் ஏஜென்ஸி என்ற அமைப்புடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு யாரெல்லாம் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார்கள் என்று கணக்கிடப்பட்டது. அதன்படி, குடும்பத்தை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இந்தியர்கள் 45 பேரின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

குடும்பத்தினரை தவிக்க விட்டு, வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலங்களவையில் சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்தும், இன்னும் அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்று அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP