நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4- ஆம் தேதியும், 2019-20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 5 -ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
 | 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

17 -ஆவது மக்களவையின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (ஜூன் 17) தொடங்குகிறது. 

இதில் முதல் நிகழ்வாக, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எம்.பி.க்களாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், நாளை மற்றும் நாளை மறுநாள், மாநிலவாரியாக தங்களது பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் விரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து  ஜூன் 19 -ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

அதையடுத்து ஜூன் 20 -ஆம் தேதி, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4- ஆம் தேதியும், 2019-20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 5 -ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

நாளை தொடங்கி, ஜூலை 26 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், முத்தலாக் தடை சட்ட மசோதா, ஆதார் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP