பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான்; அதனை மீட்டெடுப்போம்: அமைச்சர் ஜெய் சங்கர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான்; அதனை நாம் நிச்சயம் மீட்டெடுப்போம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
 | 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான்; அதனை மீட்டெடுப்போம்: அமைச்சர் ஜெய் சங்கர

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான்; அதனை நாம் நிச்சயம் மீட்டெடுப்போம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றிய நமது நிலைப்பாடு எப்பொழுதுமே தெளிவாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதை நிறுத்த வேண்டும். உலக நாடுகள் பலவும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பாகிஸ்தான் பயங்கரவாதம் என்ற கருவியை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக வெளிப்படையாக பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதை உலக நாடுகள் அனைத்துமே ஒரு நாள் தெளிவாக புரிந்து கொள்ளும். இந்தியா அதனை உணர வைக்கும். 

வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக பயங்கரவாதத்தை வெளிக்காட்டும் அண்டை நாடு பாகிஸ்தானை தவிர வேறு எந்த நாடும் இருக்க முடியாது ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதியை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. பிரதமர் மோடியின் இரண்டாவது முறையான ஆட்சி காலத்தில் கடந்த 100 நாட்களில் வெளியுறவுத் துறையின் மூலமாக உலக நாடுகளிடையே ஒரு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP