எல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்.தீவிரவாதிகள்: பதிலடியில் இந்தியா

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 | 

எல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்.தீவிரவாதிகள்: பதிலடியில் இந்தியா

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த லாஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத தாக்குதலில் பழ வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டார். இதைதொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்த டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே பயங்கரவாத ஊடுருவல்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் அப்பகுதியில் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 - வயது சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், அந்த தாக்குதலுக்குக் காரணமான 3 பேரில் ஆஷ்வ் மக்பூல் என்பவர், இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 - வது சட்டப்பிரிவு திரும்பபெறப்பட்ட நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் நிலை எப்படி உள்ள என்ற கேள்விக்கு, கலவரங்களும், போராட்டங்களும் குறைந்து, விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் சிறிது சிறதாகக் குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் முழுமையான ஒத்துழைப்பால், சீக்கிரமே பழைய நிலை திரும்பும் என டிஜிபி தில்பாக் கூறினார்.

கடந்த செப்4 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெனரல் கெ.ஜெ.எஸ். தில்லான் கூறியதாவது:-  மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் சீரான வேலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், இராணுவ வீரர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களில் குல்மார்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 350 தாக்குதல்கள்  நடத்தப்பட்டதாகவும், அதை தொடர்ந்து, இரண்டு பாகிஸ்தானிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும்  தாக்குதல்களில் சில இராணுவ வீரர்களும், போலீசாரும் காயப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் கெ.ஜெ.எஸ். தில்லான் கூறியிருந்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP