இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன்!

காஷ்மீர் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
 | 

இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன்!

காஷ்மீர் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன்  அனுப்பியுள்ளது. 

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று 12 போர் விமானங்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. 

மேலும், இன்று எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் -16 விமானத்தை இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

மேலும், எப்-16 பாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்திய மிக்-21 விமானம் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. அந்த விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP