ஜிகாதிகள் உதவியுடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக மீண்டும் ஆயத்தமாகி வரும் பாகிஸ்தான், இந்திய எல்லையோரங்களில் பயங்கரவாத முகாம்களையும், ஏழு ஏவுகனை தாக்குதல் மையங்களையும் அமைத்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 | 

இந்த தாக்குதலுக்காக, ஆப்கானிஸ்தான் மற்றும் பஷ்டூன் கூலிப்படையினர் உட்பட சுமார், 275 ஜிகாதிகள் எனப்படும், பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் . சுமார், 80 பயங்கரவாதிகள் குரேஸுக்கு அருகில், மச்சலில் 60, கர்ணாவில் 50, கெரனில் 40, யூரியில் 20, நகாமில் 15 மற்றும் ராம்பூரில் 10 பயங்கரவாதிகள்  ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் பாக்.,  ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் கூட்டணி அமைத்து தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP