இந்தியாவுடன் போட்டியிட்டு பாகிஸ்தானால் வெல்ல முடியாது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்த செயலும் வெற்றி அடையாது என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 | 

பூனேவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை வெகுவாக தாக்கிப் பேசியுள்ளார்.

முன்பு தொட்டே பாகிஸ்தான்-இந்தியாவின் உறவு சுமூகமான நிலையில் இல்லை என்றாலும், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதில் இருந்து, பாகிஸ்தானின் அத்துமீறல்களும், தாக்குதல்களும் இந்திய எல்லை பகுதிகளில் அதிகமாக காணப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, பயங்கரவாத நிதியுதவிக்கு பெயர் போன பாகிஸ்தானால் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதல்களை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான இந்தியாவின் வர்த்தக உறவும் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டது, உலக நாடுகளின் மத்தியிலும் ஓர் பயங்கரவாத நாடாகவே பாகிஸ்தான் காணப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவை அழிக்கும் பாகிஸ்தானின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும், இந்தியாவுடன் போட்டியிட்டு வெல்வது பாகிஸ்தானால் என்றுமே முடியாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP