'பூஞ்ச்' செக்டாரில் பாகிஸ்தான் எல்லை மீறல்; பதிலடி கொடுக்கும் இந்தியா!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 'பூஞ்ச்' செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
 | 

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இன்றும், அதிகாலை 3 மணியளவில், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட அக்னூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்தது.

தொடர்ந்து தற்போது பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இந்திய பாதுகாப்புப்படை முகாம் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP