இந்திய ராணுவ முகாம் அருகே பாக்., விமானம் குண்டு வீச்சு?

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரியில், நம் ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே, பாக்., விமானங்கள் குண்டு வீசியதாக, முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டில் பாலகோட் பகுதியில், நம் விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில், பயங்கரவாதிகள், 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில், பாக்., விமானங்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. எனினும், நம் விமானப் படை விமானங்கள் அவற்றை தடுத்து பின் வாங்கச் செய்ததாக தகவல் வெளியானது. 

இதற்கிடையே, ரஜோரியில் உள்ள நம் ராணுவ முகாம் அருகே, பாக்., போர் விமானங்கள் குண்டு வீசியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP