பச்சிளம் குழந்தையை மறந்து விட்டு செல்லும் அவலம் (அதிர்ச்சி வீடியோ)

தற்போதைய கால கட்டத்தில் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் ஏன் ஆக்ஸிஜன் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால், ஒரு நிமிடம் செல்போன் இல்லாமல் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது.
 | 

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபோன் என்பது தகவல்களை பறிமாறி கொள்ளும் ஒரு அத்தியாவசிய பொருளாக இருந்தது. தற்போது, அனைத்து வீடுகளிலும் தாய்மார்கள் சொல்லும் ஒரே சொல், "செல்போனை உடைச்சி போட்டு விடுவேன்" என்பது தான், ஆமாம், கடந்த 5 ஆண்டுகளில் செல்போன்களின் வளர்ச்சி அபரிவிதமாக வளர்ந்துள்ளது.

ஸ்மாட் ஃபோன், அதினுள் இருக்கும் ஆஃப்கள், அதோடு ஃகேம்கள், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தாலும்,  மனிதர்கள் ஒருவரை ஒருவர் விட்டு வெகு தூரம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. வெகு தொலைவில் இருப்பவர்களை இணைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம், இன்று அருகில் இருக்கும் மனிதர்களை கூட வெகு தொலைவிற்கு கொண்டு சென்று விட்டது. 

தற்போதெல்லாம் செல்போனில் பேசிக்கொண்டே ஏதேனும் பொருட்களை விட்டுவிட்டு செல்வது வாடிக்கை தான். ஆனால், இங்கு செல்போன் பேசிக்கொண்டு பச்சிளம் குழந்தையையே விட்டுசென்ற காட்சி சற்று அதிர வைத்தாலும், செல்போனில் நாம் எந்த அளவு மூழ்கியிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP