ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 | 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆக.21 ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  அதை தொடர்ந்து சிபிஐ காவலில் இருந்து ப.சிதம்பரம், செப். 5ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP