தான் திறந்து வைத்த கட்டிடத்திலேயே சிறை வைக்கப்பட்ட ப.சிதம்பரம்!

ப.சிதம்பரம் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட சிபிஐ தலைமைக் கட்டிடத்தை 2011ல் மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தான் திறந்து வைத்துள்ளார்.
 | 

தான் திறந்து வைத்த கட்டிடத்திலேயே சிறை வைக்கப்பட்ட ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  திறந்து வைத்த சிபிஐ தலைமை அலுவலக கட்டிடத்திலே அவர் இரவு முழுவதும் விசாரிக்கப்பட்டு வந்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களுள் ஒருவரான  ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா  வழக்கில் நேற்று (புதன்கிழமை) இரவு மத்திய புலனாய்வுப் பிரிவினரால் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிபிஐ  தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம்,  இரவு முழுவதும்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால், ப.சிதம்பரம் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட சிபிஐ தலைமைக்  கட்டிடத்தை  2011ஆம் ஆண்டு  மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தான் திறந்து வைத்துள்ளார் என்பது  தான்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP