இஸ்லாமியர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் ஒவைஸி - சன்னி வக்ஃப் வாரிய தலைவர் குற்றச்சாட்டு!!!

அயோத்தியா வழத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவாய்ஸி. இதை தொடர்ந்து, இஸ்லாமியர்களை தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கும் ஒவாய்ஸிக்கும், பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பக்தாதிகக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார் சன்னி வக்ஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி.
 | 

இஸ்லாமியர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் ஒவைஸி - சன்னி வக்ஃப் வாரிய தலைவர் குற்றச்சாட்டு!!!

அயோத்தியா வழத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைஸி. இதை தொடர்ந்து, இஸ்லாமியர்களை தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கும் ஒவாய்ஸிக்கும், பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பக்தாதிகக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார் சன்னி வக்ஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி.

வரலாற்று சிறப்புமிக்க இந்து இஸ்லாமியர்களுக்கு இடையான அயோத்தியா வழக்கில், கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அயோத்தியாவின் சர்ச்சைக்குரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை தொடர்ந்து, இந்த தீர்ப்பு குறித்த தனது கருத்தை பதிவு செய்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைஸி, அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது. இந்த தீர்ப்பில் உள்ள உண்மையை உணர்ந்துதான் இஸ்லாமியர்கள் அனைவரும் அமைதியாக உள்ளனர். இந்நிலையில், ஒவைஸியின் இந்த தீர்ப்பு, அவர்களிடையே தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதென்றும், இவரின் இந்த கருத்துக்கள் அவர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், உச்ச நீதிமன்றத்து எதிராக மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் அசாதுதின் ஒவாய்ஸிக்கும், பயங்கரவாத அமைப்பின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும், இப்படிப்பட்ட தவறான பாதைக்கு மக்களை வழிநடத்தும் அவரையும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் சன்னி வக்ஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP