என்னை திட்டும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எதிர்க்கட்சிகள்: மோடி

திரிபுராவில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தன்னை திட்டும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக கிண்டலடித்துள்ளார்.
 | 

என்னை திட்டும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எதிர்க்கட்சிகள்: மோடி

திரிபுராவில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தன்னை திட்டும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக கிண்டலடித்தார்.

பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ள நிலையில், அந்த கூட்டணியை 'மெகா கலப்படம்' என பிரதமர் மோடி விமர்சித்தார். எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும், டெல்லியிலும், கொல்கத்தாவிலும் மேடையில் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மட்டுமே செய்கின்றனர், என்றார். "அவர்களுடைய ஒரே வேலை, என்னை பற்றி தவறாக பேசுவது. ஏதோ மோடியை திட்டும் ஒலிம்பிக் நடப்பது போல உள்ளது" என்றார் மோடி.

மேலும் "மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பார்க்காத கட்சிகள் கூட, தன்னை திட்டுவதற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்" என்று கூறியுள்ளார். இடதுசாரி கட்சிகள், இதுவரை அம்மாநிலத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், விவசாயிகளும் எதுவுமே செய்ததில்லை என்றும் மோடி விமர்சனம் செய்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP