ஒன்ப்ளஸ் மொபைலுக்கு இணையான Oppo K1; ஆனால், பாதி விலை தான்!

விலையுயர்ந்த மொபைல்களில் மட்டுமே நவீன இன்-டிஸ்பிளே ஃபிங்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் தொழில்நுட்பம் இருந்துவரும் நிலையில், ஒப்போ நிறுவனம் K1 என்ற குறைந்த விலை மொபைலை அட்டகாசமான பல வசதிகளுடன் வெளியிட்டுள்ளது.
 | 

ஒன்ப்ளஸ் மொபைலுக்கு இணையான Oppo K1; ஆனால், பாதி விலை தான்!

விலையுயர்ந்த மொபைல்களில் மட்டுமே நவீன இன்-டிஸ்பிளே ஃபிங்கர்ப்ரிண்ட் ஸ்கேனர் தொழில்நுட்பம் இருந்துவரும் நிலையில், ஒப்போ நிறுவனம் K1 என்ற குறைந்த விலை மொபைலை அட்டகாசமான பல வசதிகளுடன் வெளியிட்டுள்ளது.

வாட்டர்டிராப் நாட்ச் எனப்படும், டிஸ்பிளேவுக்கு மேல் பக்கம், சிறிய துளி போன்ற இடைவெளியில் முன்பக்க கேமரா; டிஸ்ப்ளேவுக்கு அடியிலேயே விரல் ரேகை பதிவு செய்யும் சென்சார், என அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட் போன் சமீபத்தில் வெளியானது. உச்சக்கட்ட மொபைல்களில் மட்டுமே பார்க்கப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பங்களை நடுத்தர விலை கொண்ட மொபைல்களுக்கும் கொண்டு வந்துள்ளது ஒப்போ. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள K1 ஸ்மார்ட்போன் இதில் தனித்து நிற்கிறது. இந்த மொபைலில் 6.4 இன்ச் Full HD டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்ப்ளேவில், முன்பக்க கேமரா வாட்டர்டிராப் நாட்சில் இருப்பதால், டிஸ்பிளேவின் அளவு சுமார் 91 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரல்ரேகையை பின்பக்கம் பதிவு செய்யாமல், முன்பக்கமே டிஸ்பிளேவுக்கு அடியில் பதிவு செய்துகொள்ளும் தொழில்நுட்பமும் இந்த மொபைலில் உள்ளது. 

4ஜிபி ராம்; ஸ்னாப்டிராகன் 660 பிராசசர், இந்த மொபைலில் உள்ளது. 64 ஜிபி மெமரி கொண்ட இந்த மொபைலில் 3600 mAh பேட்டரியும் உள்ளது. பின் பக்கத்தில் 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட இரட்டை கேமராவும்; முன்பக்கத்தில், 25 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளன. இவ்வளவு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.16,990 என தெரிவிக்கப்பட்டுள்ளது

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP