ஆபரேஷன் காஷ்மீர்: பதறும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 | 

ஜம்மு - காஷ்மீரில், அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாதிகளை ஒடுக்கி, பிரிவினைவாதிகளின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் 10 ஆயிரம் வீரர்கள், காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கூடுதலாக, 28 ஆயிரம் வீரர்கள் களமிறக்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு, விரிவான விளக்கம் தேவை என எதிர்க் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆபரேஷன் காஷ்மீர்: பதறும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

அங்கு நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பரூக் அப்துல்லா தலைமையில், இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற, எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP