இந்தியா-ஜப்பான் 2+2 உரையாடலுக்கான தொடக்கக் கூட்டம்!!!

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான 2+2 உரையாடலுக்கான தொடக்கக் கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்திய பிரிதிநிதிகளாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 | 

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது இந்தோ-ஜாப்பனீஸ் சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய இருவரும், இருநாடுகளின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக தொடங்கியதே இந்த 2+2 உரையாடல் மாநாடு.

இதை தொடர்ந்து, இந்த உரையாடலுக்கான தொடக்க சந்திப்பு கூட்டம் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, ஜப்பான் பிரதிநிதிகளாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சூ மோட்டேகியும், பாதுகாப்பு அமைச்சர் தாரோ கோனோ ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே கூட்டத்திற்கான இந்திய பிரதிநிதிகளாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பில் இருநாடுகளும், தங்களின் வர்த்தகம் மற்றும் நட்புறவை பலப்படுத்துவது குறித்தும், "ஆக்ட் ஈஸ்ட் பாலிஸி" குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும், இருநாடுகளிலும் அமைதியான பாதுகாப்பான சூழல் நிலைபெறுவதற்காக பாதுகாப்பு யுக்திகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவான கலந்தாலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP