ஒரே நாடு - ஒரே தேர்தல்: பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு!

"ஒரே நாடு -ஒரே தேர்தல்" என்ற கருத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

ஒரே நாடு - ஒரே தேர்தல்: பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு!

"ஒரே நாடு - ஒரே தேர்தல்" என்ற கருத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்க, "ஒரே நாடு -ஒரே தேர்தல்" என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியது:

பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 21 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மூன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கூட்டத்தில் பங்கேற்க இயலாததற்கான காரணங்களை விளக்கி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டும் இத்திட்டம் குறித்து சில சந்தேகங்களை எழுப்பினர். அவர்களை தவிர, பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஒரே நாடு -ஒரே தேர்தல் என்பதற்கு இக்கூட்டத்தில் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

"ஒரே நாடு -ஒரே தேர்தல் என்பது நாட்டு மக்களின் விருப்பமே தவிர, மத்திய அரசின் செயல் திட்டம் கிடையாது" என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதுதொடர்பாக உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP