புல்வாமா தாக்குதலில் தொடர்பிருப்பதாக சந்தேகம் - ஒருவர் கைது

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 | 

புல்வாமா தாக்குதலில் தொடர்பிருப்பதாக சந்தேகம் - ஒருவர் கைது

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள பெலாரி கிராமத்தில், ரெஹான் என்பவரை காவல்துறை கைது செய்தது. அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட நபரிடம், புல்வாமா தாக்குதல் மற்றும் அதை நடத்திய ஜெயஷ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை மூத்த அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே தெரிவித்தார்.

புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி, சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் கூடிய காரை மோதச் செய்து, தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்குள் புகுந்து ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசித் தகர்த்தது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP