பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பரபரப்பு நிகழ்வுகளுக்கு இடையே, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா இன்று ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
 | 

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா இன்று ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் துணை ராணுவப்படையினர் 10,000 பேர்  காஷ்மீரில் குவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மேலும் 28,000 வீரர்களை காஷ்மீருக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

இதுதவிர, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, ஜம்முவை புதிய மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், ஜீலம் நதியில் பாகிஸ்தான் கட்டி வரும் அணையை இந்திய ராணுவம் தகர்த்து வருவதாகவும், இந்த நடவடிக்கையின் போது காயமடைந்த சீனர்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

முன்னதாக, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் வாரியத் தலைவராக முன்னர் பதவி வகித்து வந்தார். அப்போது, அந்த வாரியத்துக்கு சொந்தமான சுமார் நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை ஜம்மு-காஷ்மீர் வங்கியில் வாரியத்துக்கு தொடர்பேயில்லாத பல்வேறு நபர்களின் பெயரில் வைப்பு வைத்திருந்தார். 

அந்த வைப்புத்தொகையா நூறுகோடி ரூபாயை பின்னர் முறைகேடாக தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு ஃபரூக் அப்துல்லா வரவு வைத்து ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார். இந்த ஊழல்  விவகாரம் அந்த வங்கியில் சமீபத்தில் நடத்திய சோதனைகளின்போது அமலாக்கத்துறைக்குத் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபரூக் அப்துல்லாவிடம், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தான் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

இதைத்தொடர்ந்து, விசாரணை நடைபெற்ற இரண்டு மணி நேரத்திலேயே பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஒமர் அப்துல்லா, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர். ஆனால், அவர்களது பேச்சுவார்த்தை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. 

இந்த சூழ்நிலையில் தான் காஷ்மீரில் நிலவும் பரபரப்பு நிகழ்வுகளுக்கு இடையே, ஒமர் அப்துல்லா இன்று ராஜ்பவனில் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

தற்போதைய காஷ்மீர் நிலவரம் குறித்து அவர் ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று பேசப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP