எம்.பிக்களுடன் யோகா செய்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.பிக்களுடன் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா யோகாசனம் மேற்கொண்டு வருகிறார்.
 | 

எம்.பிக்களுடன் யோகா செய்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.பிக்களுடன் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா யோகாசனம் மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு 5வது சர்வதேச யோகா தினம் "இதய ஆரோக்கியத்திற்கு யோகா" என்ற கருத்தை மையமாக கொண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

யோகா தினத்தையொட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடக்கும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ராஞ்சி பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் மாணவர்களுடன் பிரதமர் மோடி யோகா மேற்கொண்டார்.

எம்.பிக்களுடன் யோகா செய்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா!

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.பிக்களுடன் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா யோகாசனம் மேற்கொண்டு வருகிறார். இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர். 

மேலும், பல பகுதிகளிலும் பல தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் யோகா செய்து யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP