ஆந்திர சட்டப் பேரவை கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆந்திராவில் சட்டப் பேரவை கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் இன்று வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருகிற 30 ஆம் தேதி பதவி ஏற்பார் என தெரிகிறது.
 | 

ஆந்திர சட்டப் பேரவை கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆந்திராவில் சட்டப் பேரவை கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருகிற 30ஆம் தேதி பதவி ஏற்பார் என தெரிகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவர் வருகிற 30ஆம் தேதி பதவியேற்க உள்ளதை அடுத்து, நேற்று மாலை  தெலங்கானா& ஆந்திர ஆளுநர் இ.எல். நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து, ஆந்திராவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

மேலும், ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன்ரெட்டி, இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP