மாணவர்களை 'சலாம் அலேக்கும்' சொல்ல வற்புறுத்திய ஆசிரியரு்க்கு நோட்டீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓர் அரசுப் பள்ளியில் மாணவர்களை 'காலை வணக்கம்' சொல்வதற்கு பதிலாக 'சலாம் அலேக்கும்' சொல்ல வற்புறுத்திய உருது ஆசிரியரிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

மாணவர்களை 'சலாம் அலேக்கும்' சொல்ல வற்புறுத்திய ஆசிரியரு்க்கு நோட்டீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓர் அரசுப் பள்ளியில் மாணவர்களை 'சலாம் அலேக்கும்' சொல்ல வற்புறுத்திய உருது ஆசிரியரிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹார்டோ மாவட்டத்துக்குள்பட்ட சண்டிலா நகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் இஷ்டாக் கான் என்பவர் உருது ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மாணவர்களை 'காலை வணக்கம்' சொல்வதற்கு பதிலாக, 'சலாம் அலேக்கும்' எனக் கூற சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனை மாணவர்கள் அவர்களது பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு செல்லவே, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரம் குறி்த்து பஜ்ரங் தள் அமைப்பினர் சம்பந்தப்பட்ட  மாவட்ட கல்வி நி்ர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக் கோரி, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது விளக்கம் திருப்தி அளிக்கும்படி இல்லாதபட்சத்தில் அவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP