ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த அண்ணலின் அஹிம்சை வழி போராட்டங்கள்!

அரசியல் கட்சியினர் இன்று மேற்கொள்ளும் உண்ணாவிரதங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதென தெரியவில்லை. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் ஆங்கில ஆட்சியாளர்களை அசைத்துதான் பார்த்தது.
 | 

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த அண்ணலின் அஹிம்சை வழி போராட்டங்கள்!

அரசியல் கட்சியினர் இன்று மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம், மதிப்பு உள்ளதென தெரியவில்லை.

ஆனால்,  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து அஹிம்சை முறையில் காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆங்கில ஆட்சியாளர்களை ஆழமாக அசைத்துப் பார்த்தது எனச் சொன்னால் அது மிகையாகாது.

தீண்டாமை ஒழிப்பு,  மத நல்லிணக்கம் போன்றவற்றை வலியுறுத்தி அண்ணல் காந்தி மேற்கொண்ட உண்ணாநோன்பு போராட்டங்களும் அன்றைய சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தின.

வாருங்கள்... காந்தியடிகள் மேற்கொண்ட சில முக்கியமான  உண்ணாவிரதப் போராட்டங்களை அவரது நினைவுநாளில் நினைவுகூர்வோம்...

1. 1918  -பிப்ரவரி: நூற்பாலை தொழிலாளர்களின் நலனுக்காக குஜராத்தின் ஆமதாபாத் நகரில்  காந்தியடிகள் மூன்று நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதுவே இந்தியாவில் அவர் மேற்கொண்ட முதல் அஹிம்சை வழி போராட்டமாகும்.

2.  1922 -பிப்ரவரி: உத்தரப்பிரதேச மாநிலம், சௌரி சௌராவில் ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்தில் பங்கேற்றோர் மீது பிரிட்டிஷ் போலீஸார் கண்மூடித்தனமாக  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைக் கண்டித்து, குஜராத்தின் சூரத் நகரில்  காந்தியடிகள் 5 நாள்கள் உண்ணாநிலைப் போராட்டம்  மேற்கொண்டார். அஹிம்சை வழியிலான அண்ணலின் இந்தப் போராட்டம்  ஆங்கில ஆட்சியாளர்களை அசைத்துப் பார்த்தது.

3. 1924 - செப்.18 -அக்.8: ஹிந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, டெல்லியில் காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  21 நாள்கள் அவர் மேற்கொண்ட இப்போராட்டம்  ஹிந்து, முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

4.  1932 செப். 20-26:  தீண்டாமைக்கு எதிராக அண்ணல் காந்தியடிகள் 6 நாள்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டார். அதன் எதிரொலியாக, மதம் மற்றும் சமூக வாரியாக தேர்தல் மற்றும் அரசுப் பணி இடஒதுக்கீட்டுக் கொள்கையை பிரிட்டிஷ் அரசு திரும்பப் பெற்றது.

5.  1948 -ஜனவரி 12-18: ஹிந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மகாத்மா காந்தி, டெல்லியில் 6 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதன் பயனாக,  நாட்டில் சமூக அமைதியை நிலைநாட்ட அனைத்து சமயத் தலைவர்களும், காந்திஜியின் கூட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP