இந்தியா - மியான்மர் எல்லையில் சத்தமின்றி ‛சம்பவம்’ செய்த ராணுவம்

பாக்., படையினரிடம் சிக்கிய நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த நிகழ்வுகளிலேயே அதிக கவனம் செலுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி, உலக நாடுகளின் பார்வையும் இந்த நிகழ்வுகளில் மூழ்கியிருந்த அதே சமயம், இந்தியா - மியான்மர் எல்லையில் நாச வேலையில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாதிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
 | 

இந்தியா - மியான்மர் எல்லையில் சத்தமின்றி ‛சம்பவம்’ செய்த ராணுவம்

கடந்த மாதம், இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும், பாலகோட் பயங்கரவாத முகாம் அழிப்பு சம்பவத்தின் மீது இருந்தது. அதே சமயம், இந்தியா - மியான்மர் எல்லையில், வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருந்த, பிரிவினைவாதிகளை, அந்நாட்டு ராணுவத்துடன் சேர்ந்து, துவம்சம் செய்துள்ளனர் நம் வீரர்கள். இந்த தகவல்கள் காலம் தாழ்ந்தே வெளியாகியுள்ளன. 

நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, அந்த மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பட்டுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்கத்தையும், மிசோரமையும் இணைக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சுமார், 1,000 கி.மீ., பயணம் மிச்சப்படும். இதன் மூலம், இந்தியா - மியான்மர் இடையிலான கடத்தல் வர்த்தகம் முற்றிலும் தடைபடும். இதனால், வட கிழக்கு மாநிலங்கள் வேகமாக வர்த்தக பொருளாதார வளர்ச்சியை எட்டும். 

இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல், இரு நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், வட கிழக்கு மாநிலங்களின் எல்லையோர கிராமங்கள், மியான்மரின் எல்லையிலும், சில பிரிவினைவாத அமைப்பினர் நாச வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட நம் வீரர்கள், பல முறை  அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த மாதம், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பாக்., ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. 

பாக்., படையினரிடம் சிக்கிய நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த நிகழ்வுகளிலேயே அதிக கவனம் செலுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி, உலக நாடுகளின் பார்வையும் இந்த நிகழ்வுகளில் மூழ்கியிருந்த அதே சமயம், இந்தியா - மியான்மர் எல்லையில் நாச வேலையில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாதிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இரு நாட்டு வீரர்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், அரக்கன் எனப்படும் பிரிவினைவாதிகள், நாகா பிரிவினைவாதிகள் பலர் ஒடுக்கப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான படைகள் குவிக்கப்பட்டு, சத்தமின்றி சம்பவம் செய்துள்ளனர் நம் வீரர்கள். 

இதன் மூலம், அந்த பகுதியில் இனி, நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தடை இருக்காது என, அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலை துாக்காமல் இருக்க, அப்பகுியில் படைகள் குவிக்கப்பட்டு, தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP