காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்தார்.
 | 

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினர். அப்போது, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக மோடி தன்னிடம் கூறியதாக, டிரம்ப் கூறிய செய்தி சில பத்திரிக்கைகளில் வெளியானது. இது இரு நாட்டு அரசியல் சூழ்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் மறுப்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இன்று மக்களவையில் இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். இதற்கு பதில் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "காஷ்மீர் பிரச்னையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெளிவான விளக்கத்தை தெரிவித்துவிட்டார். இதன்பின்னரும் இதுகுறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை. 

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் நமது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விஷயம். மேலும் மத்தியஸ்தம் என்பது சிம்லா உடன்படிக்கைக்கு எதிரானது" என்று பதில் அளித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP