காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை: ராகுல் காந்தி பேட்டி

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை: ராகுல் காந்தி பேட்டி

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். எனினும் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல், 'காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விமானத்தில் எங்களுடன் வந்த சக பயணிகள் அங்குள்ள நிலைமை குறித்து எங்களிடம் விளக்கினர்' என்றார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP